கண்ணே!
யாரிடமும் இல்லை உன்னிடம் போல் அழகிய கண்கள் – பெண்ணே
அதை பார்க்கத்தான் நான் தினந்தினம் வாழ்கிறேன் – கண்ணே
நித்திரை இல்லாமல் உன்னை நினைத்தேன் - என் நிறமே
ஆகையால், நீ பகலில் வரும் சந்திரனோ!?
அல்ல, நீ இரவில் வரும் அதி சூரியனோ?!
இல்லை உன் கண்ணழகால் அகிலம் சுழல மறந்ததோ!
விழித்திருந்தால் அனைத்திடமும் நீ தானே
கண் உரங்கினாலும் கனவிலும் நீ தானே
நீர் இன்றி அமையாது இவ்வுலகம்
உன் இமைகள் நனைந்தால் அதுவே எனக்கு துன்பம்
நிச்சயம் சொல்வேன் என்னுடன் நீ வா
உன் கண் கண்ணீரை மறந்து விடும் - என் அன்பே
என் அன்பை என்றுணர்வாய் - என் தேனே
தேன் உன் பெயர் போல் இனிப்பதிலையே! - மலரே
உன் முகம் பார்க்கத்தான் பூ பூக்கின்றதோ! - உயிரே
என் இதயம் அது உனக்கு தான் துடிக்கிறதோ!